இஸ்ரேல் - ஹமாஸ் சிறை கைதிகளை பரிமாற்றிக்கொள்ள கத்தார் மத்தியஸ்தம் செய்துவருவதாகத் தகவல்
Published : Oct 10, 2023 8:18 PM
இஸ்ரேல் - ஹமாஸ் சிறை கைதிகளை பரிமாற்றிக்கொள்ள கத்தார் மத்தியஸ்தம் செய்துவருவதாகத் தகவல்
Oct 10, 2023 8:18 PM
குழந்தைகள் உள்பட 150 இஸ்ரேலியர்களை ஹமாஸ் போராளிகள் பிணைய கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், இஸ்ரேல் அரசும், ஹமாஸ் போராளிகளும் சிறை கைதிகளை பரிமாற்றிக்கொள்ள கத்தார் அரசு மத்தியஸ்தம் செய்துவருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காசாவில், குடியிருப்புகள் மீது வீசப்படும் ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு பிணையக்கைதியை கொன்று வீடியோ வெளியிடப் போவதாக ஹமாஸ் போராளிகள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே, இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் பிணைய கைதிகள் 4 பேர் உயிரிழந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காசா நாடாளுமன்றத்திலிருந்து போராளிகள் தாக்குதல் நடத்தினால் நாடாளுமன்றத்தை தகர்க்கவும் தயங்க மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.