காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே பின்னோக்கி இயக்கப்பட்ட சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தண்டாவளத்தின் தடுப்புக்களை உடைத்துக்கொண்டு சாலைக்கு வந்தன.
கர்நாடகாவின் பெல்லாரியில் இருந்து இரும்பு மூலப் பொருட்கள், கம்பிகள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு 59 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று பழைய ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளது. அந்த ரயிலை சரியான தடத்தில் நிலை நிறுத்த ஓட்டுநர் பின்னோக்கி நகர்த்திய போது, திடீரென 2 பெட்டிகள் தடம்புரண்டன.
முதற்கட்ட விசாரணையில், ரயிலை பின்னோக்கி செலுத்தியபோது ஓட்டுரை ரயிலின் கார்டு தொடர்பு கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனால் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்த பிரேக் போட்ட போது தண்டவாள தடுப்பில் மோதி பெட்டிகள் சாலைக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.