கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூய்மை இந்தியா இயக்கத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
இதில் பங்கேற்க கோவைக்கு விமானம் மூலம் சென்ற நிர்மலா சீதாராமனுக்கு விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் வரவேற்பு அளித்தனர்.
கட்சியினருடன் தம்மைக் காண வந்த தூய்மைப் பணியாளர்களை நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன், அவர்களை அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து கோவை கோபால்சாமி நாயுடு பள்ளியில் மாணவர்கள் மத்தியில் தூய்மை இந்தியா இயக்கம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கிப் பேசினார்.
அதன் பின் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு தரப்பினருக்கு 3 ஆயிரத்து 749 கோடி ரூபாய்க்கான கடன் உதவிகளையும் அவர் வழங்கினார்.