​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூர்வாரப்படாத ஓடையில் ரூ.35 லட்சத்தில் 5 தடுப்பணை கட்டியது ஏன்? மக்கள் ஆவேசம்.! கழிப்பறையை கட்டி பூட்டி போட்டது ஏன்?

Published : Oct 03, 2023 7:49 AM



தூர்வாரப்படாத ஓடையில் ரூ.35 லட்சத்தில் 5 தடுப்பணை கட்டியது ஏன்? மக்கள் ஆவேசம்.! கழிப்பறையை கட்டி பூட்டி போட்டது ஏன்?

Oct 03, 2023 7:49 AM

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்த கரிக்காலி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில், பெண்கள் கழிப்பறையை கட்டி 10 வருடமாக பூட்டி வைத்திருப்பது ஏன்? என்றும், தூர்வாரப்படாத ஓடையில் 35 லட்சம் ரூபாய் செலவு செய்து 5 தடுப்பணைகள் கட்டியது ஏன்? என்றும், மக்கள் கேள்வி எழுப்பியதால் ஊராட்சி செயலாளர் திக்கு முக்காடும் நிலைக்கு தள்ளப்பட்டார். 

தெருவிளக்கு எரியவில்லை என்றால் கூட சரி செய்ய 3 மாதம் ஆவதாக கொந்தளித்த காட்சிகள் தான் இவை..!

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கரிக்காலி ஊராட்சி சுப்பிரமணிய கவுண்டனூர் ஊர் மந்தையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று ஊராட்சியின் அவலத்தை தோலுரித்தனர். பொது வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க கட்டப்பட்ட கழிப்பறை 10 வருடங்களாக பூட்டி வைத்திருப்பதாக ஆதங்கம் தெரிவித்தனர்

தங்கள் பகுதியில் வீட்டுக்கு 4 பைப்புகள் இருந்தாலும், மேல் நிலை நீர் தேக்கத்தொட்டி இடிந்து விழும் நிலையில் இருப்பதாலும், தண்ணீர்வராமல் பயனில்லாமல் இருப்பதாக ஆதங்கம் தெரிவித்தார்

ஊராட்சித் தலைவர் ஜெயமணி ராஜா எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அந்தப்பகுதியில் கட்டப்பட்ட செக்டேம் புகைப்படங்களை காண்பித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தனர். வசமநாயக்கன் பட்டியில் உள்ள இரண்டு ஏக்கர் பரப்பிலான குளத்தை தூர்வாராமல் பயன்பாடு இல்லாத ஓடையில் கடந்த 2 ஆண்டுகளில் 500 மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து 35 லட்சம் ரூபாயை செலவிட்டு தரமற்ற முறையில் செக் டேம் கட்டியதால் அரசு பணத்தை வீணாக்கி உள்ளதாக குற்றஞ்சாட்டினார்

ஓடையை தூர்வாரி விவசாயிகளுக்கு நன்மை செய்யாமல் தனியார் சிமெண்ட் ஆலையின் நலன் கருதி செக்டேம் கட்டப்பட்டிருந்தாகவும், அந்த சிமெண்ட் ஆலை தண்ணீரை உருஞ்சுவதாகவும் புகார் மேல் புகார்களை அடுக்கினார்

எந்த குற்றச்சாட்டுக்கும் பதில் கூற முடியாமல் ஊராட்சி செயலர் தினறி வாயடைத்து போனார்

ஒரு கட்டத்தில் ஆள விட்டா போதும்டா சாமி என்பது போல் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலர், உட்பட கிராம சபை கூட்டத்தின் பிரதிநிதிகள் கிராம சபை கூட்டத் முடிந்தது என்று கலைந்து சென்றனர் .