இந்திய விமானப்படைக்கு போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் விமானப்படை மிகப் பெரிய திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பட்டியலில் 180 இலகுரக மார்க் 1ஏ விமானங்கள், 156 இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் பல்வேறு ஆயுத தளவாடங்கள் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மார்க் 1ஏ விமானங்களில் 83 விமானங்களுக்கான முதல் ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தானது. மீதமுள்ள 97 விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 65,000 கோடி ரூபாய் திட்டத்தில் Su-30MKI போர் விமானங்களை மேம்படுத்துவதற்கான திட்டமும் நடப்பில் இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இதேபோல் ரஷ்யாவின் எஸ் 400 வான் பாதுகாப்பை அமைப்பின் 5 அலகுகளை வாங்குவதற்கும் பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.