H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்
Published : Sep 28, 2023 4:24 PM
H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்
Sep 28, 2023 4:24 PM
நெல்லை மாவட்டம் கணபதி சமுத்திரம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கையை பிடித்து, கடித்து வைத்ததோடு, தங்க சங்கிலியையும் பறித்து வைத்துக் கொண்டு கொடுக்க மறுத்த வேதியியல் ஆசிரியை மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்
அரசு பள்ளியில் நடந்த அடிதடியில் தலைமை ஆசிரியை கையை கடித்ததோடு, தங்க சங்கிலியையும் பறித்து வைத்து கொண்டு கொடுக்க மறுத்த கோபம் குறையாத வேதியியல் டீச்சர் ஸ்டெல்லா ஞானசெல்வி இவர்தான்..!
கையில் கடிவாங்கியதால் கண்ணீர் விட்டு கதறும் நிலைக்கு தள்ளப்பட்டார் தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி ..!
நெல்லை மாவட்டம் கணபதி சமுத்திரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் ஸ்டெல்லா ஞானசெல்வி என்பவர், மாணவ மாணவிகளிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வது வழக்கம் என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் வகுப்பறையில் பேசிக் கொண்டிருந்த மாணவன், மாணவியை ஆபாச வார்த்தைகளால் விளாசி எடுத்துள்ளார். இதனால் கலங்கி கண்ணீர் விட்ட மாணவியிடம் தான் திட்டியது குறித்து , வீட்டில் தெரிவித்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி அனுப்பி உள்ளார்.
இதனை அந்த மாணவி வீட்டில் சொல்ல அவரது பெற்றோர் பள்ளிக்கு வந்து வேதியல் ஆசிரியயையின் ஆபாச அர்ச்சனை குறித்தும், பிளாக் மெயில் குறித்தும் தலைமை ஆசிரியை ரெத்தின ஜெயந்தியிடம் புகார் தெரிவித்து சென்றதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே வேதியியல் ஆசிரியை மீது பல புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில் புதிதாக வந்த புகாரையும் சேர்த்து விசாரித்த ரத்தின ஜெயந்தி, மாணவிகளிடம் ஏன் ஆபாசமாக பேசுகிறீர்கள் ? என்று சத்தம் போட்டுள்ளார், அடுத்த நொடியே ஆவேசமான வேதியல் ஆசிரியை, தலைமை ஆசிரியையுடன் சரிக்கு சமமாக மல்லுக்கு நின்றதாக கூறப்படுகின்றது.
வாக்குவாதம் முற்றி தலைமை ஆசிரியையின் கையை பிடித்து கடித்து வைத்த வேதியல் ஆசிரியை, தங்க சங்கிலியையும் பறித்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. தலைமை ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியைகள் ஓடி வந்து இருவரையும் விலக்கி விட்டதாக கூறப்படுகின்றது. தலைமை ஆசிரியை வலியால் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரிடம் தன்னை 3 வருடமாக தலைமை ஆசிரியை டார்ச்சர் செய்ததால் கடித்து வைத்ததாக வேதியிடல் ஆசிரியை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்
இதையடுத்து வேதியியல் ஆசிரியை மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ஆசிரியைகளுக்கிடையே பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்த சண்டை குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
மாணவ மாணவிகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியைகளே ஒருவர் மீது ஒருவருக்குள்ள காழ்ப்புணர்ச்சியால் குழாயடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது