காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த ஆடுகளை மேயவிட்டு புற்களை அப்புறப்படுத்தும் அதிகாரிகள்
Published : Sep 27, 2023 8:41 PM
காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த ஆடுகளை மேயவிட்டு புற்களை அப்புறப்படுத்தும் அதிகாரிகள்
Sep 27, 2023 8:41 PM
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காய்ந்த புல்லை வெள்ளாடுகளை விட்டு மேய விடுவதன் மூலம் காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு ஆண்டுதோறும் சராசரியாக 40 லட்சம் ஏக்கர் காடுகள் காட்டுத்தீக்கு இரையாகி வருகின்றன.
கோடை வெயிலில் காய்ந்த புற்களும், மண்டிக்கிடக்கும் புதர்களும் காட்டுத்தீ பரவலை அதிகரிப்பதால் அவற்றை அப்புறப்படுத்த தீயணைப்புத்துறையினர், பள்ளி நிர்வாகங்கள் இன்னும் சில நிறுவனங்களும் ஆடுகளை வாடகைக்கு எடுத்து மேயவிட்டு வருகின்றனர். ஒரு ஆட்டு மந்தை ஒரே நாளில் ஒரு ஏக்கர் புதர்களை அப்புறப்படுத்திவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்