காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூருவில் பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறப்பதற்கு கர்நாடக அணைகளில் போதிய அளவில் தண்ணீர் இல்லை என கூறியுள்ளார்.
மேலும், வறட்சி ஏற்படும் சூழலில் உள்ள 194 தாலுகாக்களில் நல்ல மழை பொழிய வேண்டும் என கோவிலில் வேண்டிக்கொண்டதாகவும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, முதலமைச்சர் சித்தராமையாவும், துனை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் தமிழக அரசின் ஏஜண்டுகளைப் போல செயல்படக்கூடாது என முன்னாள் முதலமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான எடியூரப்பா விமர்சித்துள்ளார்.