ஃப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களில் ஸ்மார்ட் போன் உற்பத்தி மற்றும் மின்னணு உபகரணங்கள், செல்போன் உதிரி பாகங்களை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று பிளக்ஸ்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட்.
இந்த நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்த வேலூர் பகுதியில் அமைந்துள்ள சிப்காட்டில் இயங்கி வருகிறது.
குறிப்பாக சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஹவாய் தனது ஸ்மார்ட் ஃபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய பிளெக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஆலையில் ரெட்மி, ஆப்பிள், போன்ற செல்போன்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையிலும் சென்னை பெருங்குடி கந்தன்சாவடியில் உள்ள அதன் கார்ப்பரேட் அலுவலகத்திலும் சோதனைகள் நடைபெறுகின்றன.
கோவை சரவணம்பட்டியிலுள்ள ஃப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.