ஐநா. பொதுச்சபையின் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளமுடியாது என்றும் அது பயங்கரவாதத்திற்கான எதிர்வினையாகி விடாது என்றும் கனடா அரசு பயங்கரவாதத்துக்கு துணை போவது குறித்து மறைமுகமாக விமர்சித்தார்.
ஐநா.சபையின் செயல் திட்டத்தை சில குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே வடிவமைத்துக் கொண்டிருப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அனைவரும் நமது மனங்களை செலுத்தினால் மாற்றலாம் என்றும் அமைதியான அனைவருக்கும் சமமான ஜனநாயக ரீதியான முறை இருக்கும்போதுதான் சட்டங்களும் மதிக்கப்படும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.