இந்திய திரைத்துறையில் உயர்ந்ததாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பழம்பெரும் நடிகையான வஹீதா ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்தவரான 85 வயது வஹீதா, 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் விஸ்வரூபம் - 2 படத்தில் கமல்ஹாசனின் தாயார் கதாபாத்திரத்திலும் நடித்தவர்.
இந்நிலையில், இந்திய சினிமாவுக்காக வஹீதா ரஹ்மான் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காக இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு வழங்கப்படுவதாக மத்திய அனுராக் தாக்குர் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.
பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகளை பெற்ற வஹீதா, தனது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் உயரத்தை அடையலாம் என பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக அவர் கூறினார்.