மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரு மாநிலத்தில் போதுமான தகுதியான நபர்கள் கிடைக்காதபோது, பிற மாநிலத்தைச் சேர்ந்த நபர்களைக் கொண்டுதான் பணியிடங்களை நிரப்ப முடியும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற ரோஜ்கர் மேளாவில், மத்திய அரசுப் பணி நியமனம் பெற்றவர்களிடையே அவர் பேசினார்.
தமிழகத்தில் மத்திய அரசுப் பணிகளுக்கு 100 பேரைத் தேர்வு செய்கிறோம் என்றால், 40 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, மீதமுள்ள 60 பேரை பிற மாநிலங்களில் இருந்துதான் தேர்ந்தெடுத்து பணியமர்த்த முடியும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தமிழக மாணவர்கள் தங்களைத் தகுதியானவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.