நா.. பாட்டுக்கு சிவனேன்னு... தானடா போயிட்டு இருந்தேன்...? எஸ்.ஐயை தட்டி சாய்த்த காளைகள்..!
Published : Sep 25, 2023 8:54 PM
நா.. பாட்டுக்கு சிவனேன்னு... தானடா போயிட்டு இருந்தேன்...? எஸ்.ஐயை தட்டி சாய்த்த காளைகள்..!
Sep 25, 2023 8:54 PM
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடு சாலையில் நின்று சண்டையிட்ட காளைமாடுகள் ரெண்டு ஒன்றையொன்று தள்ளிக் கொண்ட நிலையில், சாலையோரம் ஒதுங்கி சென்ற காவல் உதவி ஆய்வாளரை இடித்து சாலையில் தள்ளிய காட்சிகள் வெளியாகி உள்ளது.
சாலையோரம் மல்லுக்கு நின்ற காளைகளை சிலர் விரட்டிவிட, சாலையின் நடுவில் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு சிலை போல காளைகள் நின்ற காட்சிகள் தான் இவை..!
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் மாடுகளை சாலைகளில் அவிழ்த்து விட்டவர்களின் பொறுப்பற்ற செயலால் சுற்றித்திருந்த காளை மாடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. சாலையில் மல்லுக்கு நின்ற காளைகளை கண்டு வாகன ஓட்டிகள் மிரண்டபடியே விலகிச்சென்றனர். கடைக்காரர் ஒருவர் மாடுகளின் மீது தண்ணீர் ஊற்றி அவற்றின் சீற்றத்தை குறைக்க முயன்றார்.
ஆனால் சீற்றத்தை குறைப்பதற்கு பதில் அந்த இரு மாடுகளும் கட்டுப்படா சண்டியர்கள் போல சண்டையிட்டுக் கொண்டன. அப்போது அந்த வழியாக சாலையோரம் ஒதுங்கிச்சென்று கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளரின் இரு சக்கரவாகனத்தின் மீது வந்து ஒரு மாடு விழுந்தது. இதில் சாலையில் தள்ளிவிடப்பட்ட உதவி ஆய்வாளரை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தூக்கி விட்டனர்.
பெரிய இடத்தில் கைவைத்து விட்டோம் என்று உணர்ந்தது போல அதுவரை சாலையில் அட்ராசிட்டி செய்த மாடுகள் அனைத்தும் அங்கிருந்து ஓட்டம் எடுத்தன.
சாலைகளில் சுற்றித்திரியும் நாய், ஆடு மற்றும் மாடுகளால் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விபத்துக்களில் சிக்கும் விபரீதம் நிகழ்வதால் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.