அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான கோயில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.
நியூ ஜெர்சியில் உள்ள ராபின்ஸ்வில்லில், அமெரிக்காவின் மிகப்பெரிய இந்துக் கோவிலான BAPS சுவாமிநாராயண் அக்ஷர்தம் உள்ளது.
முழுவதும் கையால் செதுக்கப்பட்ட இந்தக் கோயில், 19 ஆம் நூற்றாண்டின் இந்து ஆன்மீகத் தலைவரான பகவான் சுவாமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.
இதற்காக ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்து கற்கள் எடுக்கப்பட்டு அவை இந்தியாவில் செதுக்கப்பட்டு பின்னர் அமெரிக்காவில் கட்டப்பட்டது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோயில் திறப்பு விழாவில் அமெரிக்க அதிபர் ஜோபைடனின் நிர்வாக அதிகாரிகள், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.