நெல்லையில் இருந்து சென்னை வந்தடைந்த வந்தே பாரத் ரயிலுக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருநெல்வேலி எம்.பி ஞானதிரவியம், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை ரயில் நிலையம் வந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் மற்றும் பாஜகவினர் வரவேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் மதுரையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் இரவு 10 மணி அளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.
வந்தே பாரத் ரயிலுக்கு தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.