​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்பெயின் பிரிவினைவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஸ்பெயின் பிரதமர் பரிசீலனை... கண்டித்து எதிர்கட்சி நடத்திய பேரணியில் 40,000 பேர் பங்கேற்பு

Published : Sep 25, 2023 9:52 AM

ஸ்பெயின் பிரிவினைவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஸ்பெயின் பிரதமர் பரிசீலனை... கண்டித்து எதிர்கட்சி நடத்திய பேரணியில் 40,000 பேர் பங்கேற்பு

Sep 25, 2023 9:52 AM

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பிரிவினைவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க பரிசீலித்து வருவதை கண்டித்து எதிர்கட்சி நடத்திய பிரமாண்ட பேரணியில் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

15-ம் நூற்றாண்டில் ஸ்பெயினுடன் இணைக்கப்பட்ட கடலோனியா-வை விடுவிக்கக்கோரி 150 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஆளும்கட்சி தோல்வியை தழுவியதால், ஆட்சியை தக்கவைக்க கடலோனியா பிரிவினைவாத கட்சியின் தலைவர் கார்லஸ் பீஜ்டிமானின் ஆதரவை பிரதமர் சான்செஸ் நாடினார்.

ஸ்பெயினிலிருந்து நாடு கடத்தப்பட்ட பீஜ்டிமான், கடலோனிய பிரிவினைவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அவ்வாறு வழங்கக்கூடாது என எதிர்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன