சீனாவில் ஹாங்ஸு நகரில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய மகளிர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
வங்க தேசத்துக்கு எதிராக இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய வங்க தேச அணி, அபாரமான இந்திய பந்து வீச்சில் 17 புள்ளி 5 ஓவரில் 51 ரன்களுக்குச் சுருண்டது.
இந்திய வீராங்கனை பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 52 ரன்கள் எடுத்தால் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் அடுத்து களமிறங்கி இந்திய அணி, 8 புள்ளி 2 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இதனிடையே படகுப் போட்டி மற்றும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு இன்று மூன்று வெள்ளி மற்றும் இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்த நிலையில், கிரிக்கெட்டிலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
ஆசிய விளையாட்டில் இந்த ஆண்டுதான் முதன்முறையாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.