சென்னை-நெல்லை உள்ளிட்ட 9 புதிய வந்தே பாரத் ரயில்களை இன்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
சென்னை-திருநெல்வேலி , ஹைதராபாத் -பெங்களூர், உதய்பூர் -ஜெய்ப்பூர், விஜயவாடா-சென்னை உள்ளிட்ட தடங்களில் இந்த புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன.தமிழ்நாடு, ஆந்திரா,தெலுங்கானா, கர்நாடகா,ஒடிசா உள்பட 11 மாநிலங்களை இந்த ரயில்கள் இணைக்கின்றன.
கவாச் தொழில்நுட்பம் போன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த நவீன ரயில்கள், அனைத்து தரப்பினருக்கும், விரைவான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதற்கான முக்கிய படியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.