உயர் கல்வி மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் செல்லும் போது தகுதியான மருத்துவர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர்கல்வி மருந்துவப்படிப்பில் 70 ஆயிரம் இடங்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.
அதில் 4 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதால் இந்தாண்டு மட்டுமே நீட் தகுதி மதிப்பெண்ணை ஜீரோவாக அறிவிக்க வேண்டி வந்ததாக தமிழிசை கூறினார்.