பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பிற பகுதியில் வாழ்க்கை வசதிக்காகவும், உணவுக்காகவும் காட்டுமிராண்டியாய் மக்கள் அலைந்து திரிந்த காலத்திலேயே தமிழன் தன் மொழிக்கு இலக்கணம் எழுதிக் கொண்டிருந்தான் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலகம் தேடும் தமிழ் அறிவு மரபுகள் என்ற கருத்தரங்கில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், தமிழ் வளர்ச்சிக்கு தமிழக அரசு செய்து வரும் பணிகளை பட்டியலிட்டதோடு, கருத்தரங்கு தொடர்பான புத்தகங்களையும் வெளியிட்டார்.