சிவகங்கை ரயில் நிலையத்தில் விரைவு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவதையொட்டி, சிவகங்கை ரயில் நிலையம் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
காரைக்குடியிலிருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்கவும், தாம்பரம் செங்கோட்டை ரயில் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்தது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.