மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்கள் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னம்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில் 100 பேருக்கு மட்டுமே பணம் வந்ததாக கூறப்படுகிறது.
இ.சேவை மையங்களில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய முடியாமல் நான்கு நாட்களாக அலைக்கழிப்பு செய்யப்படுவதாகக் கூறி முற்றுகையிட்ட பெண்களிடம் வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய வந்த பெண்கள் அமரும் வகையில் இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டதோடு, 3 சிறப்பு கவுன்டர்களும் அமைக்கப்பட்டன.