​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கமளித்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்

Published : Sep 22, 2023 2:52 PM



புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கமளித்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்

Sep 22, 2023 2:52 PM

தனது தாய்க்கு புற்றுநோய் இருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டபோது தன்னையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தியதாக நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிசிக்கை பெற்று வருவோருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில், அப்போலோ கேன்சர் செண்டர் சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்-ன் செயலாக்க துணை தலைவர் டாக்டர். ப்ரீத்தா ரெட்டி, டாக்டர். ஹர்ஷத் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை பிரியா பவானி சங்கர், புற்றுநோய் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ரோஸ் வழங்கி பேசினார்.

புற்றுநோய் பாதிப்பு தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டால் முற்றிலும் சரி செய்துவிடலாம் என்றும், மருத்துவர்களை நம்புங்கள் என்றும் அவர் கூறினார்.