சென்னையில், தனியாக வீட்டிலிருந்த தம்பதியரை கத்தி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு 70 சவரன் நகை மற்றும் மூன்றரை லட்சம் ரூபாயை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கொத்தனார் சோழன், தனது மனைவி வனஜாவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 3 மணிக்கு கதவை தட்டும் சத்தம் கேட்டு மனைவி வனஜா திறந்துள்ளார்.
மங்கி குல்லா மற்றும் ஹெல்மெட் அணிந்து கையில் வீச்சரிவாளுடன் உள்ளே நுழைந்த 5பேர் கொண்ட கும்பல் கணவன் மற்றும் மனைவி இருவர் கழுத்திலும் கத்தியை வைத்து பணம் மற்றும் நகையை தருமாறு மிரட்டியுள்ளனர்.
பீரோவின் சாவியை பெற்று உள்ளே இருந்த 3.5 லட்சம் பணம் மற்றும், வனஜா கழுத்தில் அணிந்து இருந்த தாலி செயின், காதில் அணிந்து இருந்த நகைகள் உள்பட 70 சவரன் நகைகளை கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் கணவன், மனைவி இருவரது கைகளை பின்னால் கட்டி , வாயில் பிளாஸ்த்திரி ஒட்டி , கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு அந்த கொள்ளை கும்பல் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
சோழன் கைக்கட்டுகளை அவிழ்த்து மகளுக்கு அளித்த தகவலின் பேரில், மகள் அளித்த புகாரில் வில்லிவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.