மதுரையில் ரயில்வே பெண் போலீஸ் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரை ஐயர் பங்களாவை சேர்ந்த ஜெயலெட்சுமி மதுரை ரயில்வே கோட்டத்தில் பெண் போலீசாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு திருச்சி ரயில்வே பணிக்கு மாறுதல் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஜெயலெட்சுமி மருத்துவ விடுப்பில் சென்றதாகவும் ஆனால் அதனை ரத்து செய்துவிட்டு பணிக்கு திரும்பும்படி உயர் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயலெட்சுமி தனது மகள் பவித்ரா மற்றும் மகன் காளிமுத்து ஆகியோருடன் மதுரை - திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் தேனூர் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.