இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!
Published : Sep 21, 2023 7:56 PM
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படமாட்டாது..! சாப்பிட்டா சங்கடம் தான்..!
Sep 21, 2023 7:56 PM
எடப்பாடி அருகே மேட்டூர் அணை மீன்கள் என்று கெட்டுப்போன மீன்களை மசாலா தடவி பொறித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த அதிகாரி அதிரடியாக 50 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தார்
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிவலசு பகுதியில் மேட்டூர் மீன் கடையில் கெட்டுப்போன பழைய மீன்களை விற்பனை செய்வதாகவும் இந்த கடையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உணவு பாதுகாப்ப்புகார் அளித்திருந்தனர்....
அதன் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் குமரகுருபரன் சம்பந்தப்பட்ட மீன் கடையில் சோதனை செய்த போது பல்வேறு வகையான எண்ணெயில் பொரித்த மீன்களை ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது....
நகராட்சி தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களை வரவழைத்து கெட்டுப்போன சுமார் 50-கிலோ பழைய மீன்களை கைப்பற்றினார்
மீன் கடை உரிமையாளரின் மனைவி அழுகி போன மீன்களை இப்ப தான் விற்பனைக்கு வந்தது என்று சவுண்டு விட்டு சமாளித்த நிலையில் , அவரது கூச்சலுக்கு அஞ்சாமல் அதிகாரி அனைத்து மீன்களையும் மொத்தமாக குப்பையில் கொட்டினார்
அந்த மீன்களின் மீது பினாயிலை ஊற்றி அழித்தார். வரும் காலங்களில் இது போன்ற செயல்களை மீண்டும் செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு கடைக்கு சீல் வைக்கும் நிலைமை நேரிடும் என்றும் எச்சரித்து நோட்டீஸ் வழங்கினார்.