பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை கொடுத்திருந்தால் ஏன் மாதம் ஆயிரம் ரூபாய்க்காக அவர்கள் அரசிடம் கையேந்த வேண்டும் என சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மறைமலைநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக திமுக அரசு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுவதை பயன்படுத்தி தற்சார்பு வாழ்வாதாரத்தை பெண்களுக்கு தர முடியாதா என்றும் வினவினார்.