நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் என்றும் கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்தார் .
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன் புதிய பேருந்து நிழற்குடைக்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்குள் சலசலப்பு வந்தாலும் சரி செய்யப்படும் என்றார்.