மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபடும் தி.மு.க, மகளிர் ஒதுக்கீட்டை வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையை புறந்தள்ளாமல், அதன் நியாயத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எப்போது நடைபெறும் எனத் தெரியாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையில் நடக்கவுள்ள தொகுதி மறுவரையறை, அதன் பேரில் 2029ல் நடைமுறைக்கு வரும் மகளிர் ஒதுக்கீட்டுக்கு, இப்போதே சட்டம் இயற்றப்படும் விசித்திரம் அரங்கேற்றப்படுவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.