காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தைத்தான் முழுக்க நம்புகிறோம் என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
டெல்லியில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் ஆலோசனைக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளது என்றும், ஆனால், தமிழகத்துக்குத் தண்ணீர் விட கர்நாடகா மறுக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் ஒழுங்காற்றுக் குழு அமைத்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் என எல்லாமே உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றுதான் பெற்றோம் என்றும், காவிரி விவகாரத்தில் ஆரம்பம் முதல் இன்று வரை எதையுமே பேச்சுவார்த்தை நடத்திப் பெறவில்லை என்று அவர் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரின் அளவைப் பார்த்துவிட்டுத்தான் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகம் தண்ணீர் திறக்காமல் உள்ளது என்று அவர் கூறினார்.