உலக நாடுகளிடம் பணத்துக்காக பாகிஸ்தான் கையேந்தி நிற்கும்போது, இந்தியாவோ நிலவை சென்றடைந்துவிட்டதாகவும், ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதாகவும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவின் சாதனைகளை ஏன் பாகிஸ்தானால் அடைய முடியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
லாகூரில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் லண்டனில் இருந்து காணொலி வாயிலாக பேசிய நவாஸ் ஷெரீப், அண்மைக்காலத்தில் பாகிஸ்தான் பணவீக்கம் இரட்டை இலக்கமாக அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டினார்.