பனிக்கட்டி சோறு.. களி மாதிரி சால்னா.. அழுகி போன சிக்கன்..! ரெஸ்ட்ரண்ட் பிரிட்ஜா ? குப்பை தொட்டியா ?
Published : Sep 20, 2023 6:52 AM
பனிக்கட்டி சோறு.. களி மாதிரி சால்னா.. அழுகி போன சிக்கன்..! ரெஸ்ட்ரண்ட் பிரிட்ஜா ? குப்பை தொட்டியா ?
Sep 20, 2023 6:52 AM
நாமக்கல் ஓட்டலில் சவர்மா சாப்பிட்டு சிறுமி பலியான நிலையில் தமிழகம் முழுவதும் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ரெஸ்டாரண்டு மற்றும் ஓட்டல்களின் குளிர்சாதன பெட்டியில் இருந்து கிலோ கணக்கில் கெட்டுபோன சிக்கன் , மட்டன், முந்தின நாள் வைத்த சோறு, சால்னா, குருமா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.
நாமக்கல் ஓட்டலில் சவர்மா சாப்பிட்டு சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கோழிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார் கோழிக்கடையில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் , கோழிக்கறியில் ஈ மொய்ப்பதை கண்டு ஊழியர்களை கடிந்து கொண்டார்
கையில் உடைக்க முடியாத பனிக்கட்டி மாதிரி இருக்கே இது நாளு நாளைக்கு முன்னாடி தயாரான் சோறு... இதில் தான் பிரைடு ரைஸ் தயாராகுதாம்... சேலம்,ஆத்தூரில் உள்ள பாரடைஸ் ரெஸ்டாரண்டில்..!
இங்குள்ள குளிர்பதன பெட்டியில் மீந்து போன சால்னாவ பிரிட்ஜில் வைத்ததால் களி மாதிரி இருந்தது, அதனை வாணலியில் போட்டு சுடு தண்ணீரை ஊற்றினால் சூடான சால்னா தயார் என்று கூறி அதிகாரிகளை மிரள வைத்தனர்.
கெட்டுப்போன சிக்கன் என்று கிலோ கணக்கில் உணவு பொருட்களை குப்பை லாரியில் ஏற்றினர் உணவு பொருள் பாதுகாப்புத்துறையினர்
தங்களை கிரில் எக்ஸ்பெர்ட் என்று கூறிக்கொள்ளும் சேலம் பார்பிகுயின் ரெஸ்டாரண்டில் கெட்டுபோன சிக்கனை கைப்பற்றிய அதிகாரிகள் முந்தின நாள் தயாரான சிக்கன் சவர்மாவையும், மைதா ரொட்டிகளையும் கொட்டி அழித்தனர்
அரியலூரில் ஹைஜீனிக் பிரைடு சிக்கனை விற்பதாக கூறும் மீட் அண்ட் ஈட் சிக்கன் ரெஸ்ட்ராண்டில் வாரக்கணக்கில் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பாக்கெட் பிரியாணியையும், கெட்டுபோன சிக்கன் இறைச்சி வகைகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர்
புதுக்கோட்டை மீட் அண்ட் ஈட் உணவகத்திலும், டிசைன் டிசைனாக வெட்டி வாரக்கணக்கில் பிரிட்ஜிக்குள் பதப்படுத்தப்பட்டிருந்த கெட்டுபோன சிக்கன் வகைகள் அனைத்தையும் குப்பையில் கொட்டி பினாயில் ஊற்றி அழித்தனர்
கரூரில் கொக்கரக்கோ உணவகத்தில் சிகப்பு வர்ணம் சேர்க்கப்பட்ட கெட்டுபோன சிக்கன் கைப்பற்றி அழிக்கப்பட்டது
குளித்தலையில் உள்ள ஓட்டலில் கெட்டுப்போன சிக்கனையும், குல்பி சிக்கன் உருண்டைகளையும் பறிமுதல் செய்து அழித்தனர்
ஈரோட்டில் பார்பிக்கியூ நேசன் என்ற ரெஸ்ராடண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் ஹைபையாக மசலா தடவி வைக்கப்பட்டிருந்த கெட்டுபோன சிக்கன் மட்டன், இரால் வகைகளை கைப்பற்றினர்
பூந்தமல்லியில் சவர்மாவுக்காக வைக்கப்பட்டிருந்த சிக்கனை எடுத்து அதிகாரிகள் குப்பையில் கொட்டினர்
சிவகங்கை தொண்டி ரோடு பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் இருந்து 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் ஷவர்மா மற்றும் கலர் கலந்த பிரியாணியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
நெல்லை அரேபியன் ஹாட் கிரில் ரெஸ்டாரண்டில் கெட்டுபோன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது
பழனி அம்சவள்ளி ஓட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள் கிலோ கணக்கில் அழுகிய சிக்கனை அள்ளி குப்பையில் கொட்டினர்
கோவை கோட்டைமேடு பகுதியில் வீதியில் சுற்றித்திரிந்த உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் , உணவகங்களுக்குள் செல்லாமல், அதிக வர்ணம் கலக்கப்பட்ட தந்தூரி சிக்கனையோ, சுகாதாரமின்றி திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த சவர்மா சிக்கனையோ பறிமுதல் செய்யாமல் ஒப்புக்கு பேசிவிட்டு சென்றனர்