காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்த அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடனான சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றம் கூறியபடி காவிரியில் 15 நாள்களுக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
காவிரியில் ஆங்காங்கே சிறு சிறு அணைகளைக் கட்டி கர்நாடகா தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்துக்குத் தண்ணீர் தர கர்நாடகா மறுப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.