பிரபல நடிகரும், இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவரது மகள் மீரா சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் டிடிகே சாலையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீரா மீட்கப்பட்டார். உடனடியாக சிகிச்சைக்காக அவரை அருகில் உள்ள ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கிருந்த மருத்துவர்கள் மீரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மீரா சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் அதனால் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மீராவின் உடல், உடற்கூராய்விற்காக, ஓமந்தூரார் வளாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.