​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹைவேயில் வீலிங்..! பல்டி அடித்த பைக்..! சில்லரை வாங்கிய TTF வாசன்..! வலது கையில் மாவுக்கட்டு..!

Published : Sep 18, 2023 7:03 AM



ஹைவேயில் வீலிங்..! பல்டி அடித்த பைக்..! சில்லரை வாங்கிய TTF வாசன்..! வலது கையில் மாவுக்கட்டு..!

Sep 18, 2023 7:03 AM

ஹயபுசா அதிவேக பைக் பல்டி அடித்ததால், காஞ்சிபுரம் அருகே பைக்கர் டிடி.எப். வாசன் நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்டார். கெத்துக்காட்ட வீலிங் செய்து , வலது கையில் சில்லறை வாங்கிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

விலை உயர்ந்த பைக்குகளை அதிவேகத்தில் ஓட்டுவது....

ஊரைசுற்றியபடி சாலைகளில் வீலிங் செய்து கெத்துகாட்டுவது...

தான் செய்யும் பைக் சேட்டைகளை எல்லாம் வீடியோவாக யூடியூப்பில் பதிவிடுவதோடு, உதாராக பேசி தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் பைக்கர் டிடி.எப் வாசன்..!

டிடி.எப். வாசனின் பைக் வித்தைகளையும், பாலோயர்சையும் நம்பி ஒரு தயாரிப்பாளர் கைகாசு போட்டு மஞ்சள் வீரன் என்ற படத்தை தயாரித்து வருகிறார்..

அண்மையில் அதிவேகத்தில் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் நூலிலையில் டிடி.எப் வாசன் காயமின்றி தப்பினார்..

அந்த வகையில் தான் புதிதாக வாங்கிய 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுசுகி ஹயபுசா பைக்கில் மஹாராஷ்டிரா சென்று திரும்பிய வாசன், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்..

அதிவேகமாக சென்ற டி.டி.எப். வாசன் தன் அருகில் சென்ற காரில் இருந்தவர்களை கவர்வதற்காக வேகத்தை குறைக்காமல் முன் சக்கரத்தை தூக்கி வீலிங் செய்துள்ளார். அவரது போதாத நேரம் ஹயபுசா அவரை கைவிட்டு விட்டது..

வாசனை தூக்கி வீசிவிட்டு தறிகெட்டு ஓடிய பைக் பல அடி தூரம் பல்டி அடித்து உடைந்து நொறுங்கியது..

தலைக்கவசத்துடன், பைக்கர் உடையும் அணிந்திருந்ததால் அவரது உயிருக்கு ஆபத்தில்லை, அதே நேரத்தில் பைக்கை முறுக்கிக் கொண்டு செல்லும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டார் டி.டி.எப்.வாசன்..

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாசனின் வலது கைக்கு மாவுக்கட்டு போடப்பட்ட நிலையில் ஸ்டெச்சரில் அழைத்து வரப்பட்ட வாசன் அழுதவாரே காரில் ஏறி ஊருக்கு புறப்பட்டார்..

என்ன தான் அதிவேகமாக சென்றாலும் , தலைக்கவசம் மற்றும் பைக்கர் ஷூட்டுடன் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்ததால் அதிர்ஷ்டவசமாக வாசன் உயிர் பிழைத்ததாக போலீசார் தெரிவித்தனர்..

அதேநேரத்தில் டி.டி.எப் வாசன் விபத்தில் சிக்கிய தகவல் சிலரை கவலைகொள்ள செய்துள்ள நிலையில் அவர் மீது வன்மம் கொண்ட பலர் வாசனை கலாய்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்..