​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆயுஷ்மான் பவ - மத்திய அரசின் சிறப்பு மிக்க சுகாதாரத் திட்டம் இன்றுமுதல் அமல்..!

Published : Sep 17, 2023 7:54 AM

ஆயுஷ்மான் பவ - மத்திய அரசின் சிறப்பு மிக்க சுகாதாரத் திட்டம் இன்றுமுதல் அமல்..!

Sep 17, 2023 7:54 AM

பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று மத்திய அரசின் ஆயுஷ்மான் பவ என்ற சுகாதாரத் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

இத்திட்டத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ கடந்த 13ந் தேதி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு நகரிலும் கிராமத்திலும் சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்ய இத்திட்டம் வழிவகுக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து மருத்துவ மற்றும் சுகாதார மையங்களில் வாரம்தோறும் ஆரோக்கியமான உணவும் மருத்துவ முகாம்களும் முக்கியப் பங்கு வகிக்கும்.

ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதிலும் அனைத்து வகையான நோய்களில் இருந்தும் பாதுகாக்கவும் இத்திட்டம் இலக்காகக் கொண்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.