சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 43-வது பட்டமளிப்பு விழாவில், ஆயிரத்து 550 பேருக்கு நேரடியாக பொறியியல் பட்டச் சான்றிதழ்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
கிண்டியில் நடைபெற்ற விழாவில், 65 பேருக்கு தங்கப்பதக்கமும், ஆயிரத்து 485 பேருக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக உறுப்பு மற்றும் இணைவு பெற்ற கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 113 பேர் பட்டம் பெற்றனர்.
விழாவில் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் 13-வது இடத்திலும், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியலில் 14வது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இருப்பதாக தெரிவித்தார்.
சர்வதேச அளவிலான 275 நிறுவனங்களில் 1400 இளநிலை பொறியியல் படித்த மாணவர்களும்,380 முதுநிலை பொறியியல் படித்த மாணவர்களும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு 8.5 லட்சம் முதல் 40 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெரும் வகையில் வேலை கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய நிதி அயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நம் நாட்டின் கலாசாரமும், குடும்பக் கட்டமைப்புமே இளைஞர்களை தயார்படுத்திய உள்ளதாக தெரிவித்தார்.