புழல் சிறையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, போதை பொருட்களை சப்ளை செய்ததாக ஜெயில் வார்டன் திருமலை நம்பி ராஜாவை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
திங்கள்கிழமை இரவு சிறை தனிப்படை காவலர்கள், கைதிகள் தங்கியிருக்கும் அறைகளில் பார்வையிட்டபோது, மோசடி வழக்கில் கைதாகி சிறையில் ஏஆர்டி ஜூவல்லரி உரிமையாளர்களின் ஒருவரான ஆல்வின் இருந்த அறையில் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஆறு போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்த விசாரணையில், தான் கேட்கும்போதெல்லாம் திருமலை நம்பி ராஜா போதை பொருட்கள் தருவார் என ஆல்வின் தெரிவித்த நிலையில், வார்டனும் உண்மையை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புழல் சிறை நிர்வாகம் சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.