தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்....
நாட்டின் குடியரசு தலைவராக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கல்வியை மற்றும் கற்பிப்பதோடு நல்ல பண்புகளையும், ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பண்பு, ஆற்றல் போன்றவற்றை அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கும் தொழிலை கொண்டவர்கள் தான் ஆசிரியர்கள்.
ஒரு நாட்டின் எதிர் காலமானது குழந்தைகள் மற்றும் ஆசிரியர் கையில் தான் இருக்கிறது என்றும் சொல்லப்படுவது போல அந்தவகையில் மாணவர்களை உருவாக்கும் பொறுப்புகள் அனைத்தும் ஆசிரியர் கையில் தான் இருக்கிறது.
படித்து முடித்து வேலைக்கு செல்லும் மாணவர்களின் தொழில் மற்றும் வணிகத்தில் வெற்றிபெறும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஆசியர்கள் முக்கிய பங்கு பெற்றுள்ளார்கள்.
ஒரு கல்லை ஒரு சிற்பி செதுக்குவது போல மாணவர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்குபவர்கள் ஆசிரியர்கள்.
சாதாரண மாணவர்களை கூட தங்களின் அறிவு திறமையாலும், அனுபவங்களின் ஆற்றலாலும் சமூகத்தில் மதிப்புமிக்க ஒரு நபராக மாற்றுகிறார்கள் என்றால் அது மிகையில்ல...