சூரியனின் வெளிப்புறத்தை ஆராய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது.
குறைந்தபட்சம் 282 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 40 ஆயிரத்து 225 கிலோ மீட்டர் தொலைவிலும் விண்கலம் இயங்கி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பெங்களூர், போர்ட் பிளேர் மற்றும் மொரீஷியசில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலத்தை கண்காணித்து வருவதாகவும், மூன்றாவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் நிகழ்வு செப்டம்பர் 10ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்தனர். ஆதித்யா எல் 1 விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.