உக்ரைன் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்ஸீ ரெஸ்னிகோவ்-ஐ அந் நாட்டு அதிபர் செலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் சொத்து நிதியத்தின் தலைவர் ரஸ்டெம் உமெரோவ், உக்ரைன் நாட்டின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரெஸ்கிகோவ், பிரிட்டனுக்கான உக்ரைன் தூதராக நியமிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.