கர்நாடகாவில் மாணவிகளிடம் மத துவேஷத்தில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியை ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவமோகா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கன்னடம் கற்பிக்கும் ஆசிரியை மஞ்சுளா என்பவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது சில மாணவிகளுக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து குறிப்பிட்ட சில மாணவிகளை பாகிஸ்தானுக்குச் செல்லுமாறு மஞ்சுளா கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து வகுப்புவாதத்தை தூண்டும் நோக்கில் மஞ்சுளா பேசியதாக புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைக்குப் பின் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மஞ்சுளா மீதான குற்றச்சாட்டு குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.