​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக அதிகரிப்பு..!

Published : Sep 04, 2023 6:11 AM

ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக அதிகரிப்பு..!

Sep 04, 2023 6:11 AM

சூரியனை ஆராய்வதற்கு அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதற்கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்ட நிலையில், 2ம் கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் நாளை அதிகரிக்கப்பட உள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம், திட்டமிட்டபடி ஒரு மணி நேரத்தில் ராக்கெட்டிலிருந்து பிரிந்து பயணத்தை தொடங்கியது.

பின்னர் புவி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆதித்யா எல்1 விண்கலம் சிறப்பான முறையில் செயல்படுவதாகவும், முதல்கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்கலத்தின் அடுத்த கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் நாளை அதிகாலை 3 மணிக்கு அதிகரிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.