கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 தொகுதிகளில் 100 இடங்களில் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில், மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,விடுபட்டு போனவர்கள், அட்டைகளை பெறாதவர்கள், அட்டைகளை தொலைத்தவர்கள் ஆகியோரும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.