மெட்ராஸ் மாதத்தை முன்னிட்டு, சென்னையின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையிலும், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை மையப்படுத்தியும், சென்னை சிவானந்தா சாலையில் மேட் ஆஃப் சென்னை ரன் என்ற பெயரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து நடத்திய போட்டியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குனர் சந்திப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என நடைபெற்ற போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.