​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1 ... பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று பகல் 11.50 மணிக்குத் தொடக்கம்

Published : Sep 01, 2023 6:12 AM

நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1 ... பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று பகல் 11.50 மணிக்குத் தொடக்கம்

Sep 01, 2023 6:12 AM

ஆதித்யா எல் - 1 விண்கலத்தை ஏவும் கலத்திற்கான உட்புற சோதனைகள் நிறைவடைந்திருப்பதை ஓட்டி அதனை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்டவுன் இன்று தொடங்குகிறது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பி.எஸ்.எல்.வி.-சி 57 ராக்கெட் மூலம் அந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. சூரிய புயல், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், பூமியைப் போன்ற வேறு கிரகங்கள் உள்ளதா போன்றவற்றை ஆராய பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் அந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட உள்ளது.

விண்ணிற்கு ஆதித்யா எல் - 1-ஐ ஏந்திச் செல்லவுள்ள ராக்கெட்டின் உட்புறச் சோதனைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதாகவும், சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 கலமும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ள இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ள புகைப்படங்களையும்  வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் திட்டமிட்டபடி பி.எஸ்.எல்.வி.-சி 57 ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்டவுன் இன்று  பகல் 11.50 மணிக்குத் தொடங்குகிறது.