​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுக்கோட்டை டிரைலர் லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் பலி - 3 பேர் படுகாயம்

Published : Aug 31, 2023 6:09 PM

புதுக்கோட்டை டிரைலர் லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் பலி - 3 பேர் படுகாயம்

Aug 31, 2023 6:09 PM

சென்னையில் நடைபெறும் ஊராட்சிமன்றத் தலைவர்களின் பேரணியில் பங்கேற்க ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூன்று பேர் பயணித்த கார் விபத்தில் சிக்கியது.

விராமலை அடுத்த வானதிராயன்பட்டி பிரிவு சாலை அருகே அதிகாலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் கார் மோதியதுடன், சாலையோரம் நின்றிருந்த டிரைலர் லாரியின் பின்புறமும் மோதியது.

விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியதில் சிவகாசி ஒன்றியத்தை சேர்ந்த சங்கமம் நாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி, கிருஷ்ணபேரி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அபிமன்னன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த நடுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர்,நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரம், ஓட்டுநர் பாஸ்கர் ஆகியோர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.