​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்மையில், புதிய அரசு பேருந்துகள் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டன விரைவில் நகரப்புற பேருந்துகளின் நிறமும் மாற உள்ளது - எஸ்.எஸ்.சிவசங்கர்

Published : Aug 30, 2023 9:47 PM

அண்மையில், புதிய அரசு பேருந்துகள் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டன விரைவில் நகரப்புற பேருந்துகளின் நிறமும் மாற உள்ளது - எஸ்.எஸ்.சிவசங்கர்

Aug 30, 2023 9:47 PM

விரைவில் நகரப்புற பேருந்துகளின் நிறமும் மாற உள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கான, பொதுவான நிலையான விதிகளை வகுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம், சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது.

பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்துகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது என்றார்.