​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை என்ற நீர் பாதுகாப்பு அமைப்பு மூலமாக வீணாகும் கழிவுநீரை இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்து அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கான செயல்திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

Published : Aug 30, 2023 9:10 PM

சென்னை என்ற நீர் பாதுகாப்பு அமைப்பு மூலமாக வீணாகும் கழிவுநீரை இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்து அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கான செயல்திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

Aug 30, 2023 9:10 PM

நெதர்லாந்து மற்றும், ஆயிரம் ஏரிகளை கொண்ட அபூர்வ சென்னை என்ற நீர் பாதுகாப்பு அமைப்பு மூலமாக வீணாகும் கழிவுநீரை இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்து அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கான செயல்திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் முன்மாதிரி அமைப்பு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியில் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

பள்ளியின் மாணவர் விடுதியில் இருந்து வரும் கழிவுநீர் மற்றும் பள்ளியில் சேகரமாகும் கழிவு நீரையும் இயற்கையான முறையில் சுத்திகரிப்பதன் மூலமாக 27 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிடைப்பதாக கூறப்படுகிறது.

அந்த தண்ணீரை செடிகளுக்கு பயன்படுத்துவதோடு, போர்வெல் மூலமாக பூமிக்கு அடியில் இறக்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 2 கோடி ரூபாய் வரை செலவாகும் இந்த திட்டத்தை சென்னையில் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை இந்த அமைப்புகள் தமிழக அரசிடம் வழங்கியுள்ளது.