​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு : அண்ணாமலை

Published : Aug 30, 2023 3:36 PM



செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு : அண்ணாமலை

Aug 30, 2023 3:36 PM

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மறைந்த ஜி.கே மூப்பனாரின் 22-வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததில் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் ஜாமின் கிடைப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்றார்.